தமிழ்நாட்டில் இன்று முதல் (ஜூன் 22) 500 மதுபான கடைகள் மூடப்படுகிறது என்று டாஸ்மார்க் நிர்வாகம் தெரிவித்துள்ளது.எந்த எந்த கடைகள் மூடப்படும் என்பது பற்றியான முழு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதற்கான அறிவிப்பு ஜூன் 21 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை அமைச்சகத்தின் கீழ் ஏற்கனவே கொடுக்கப்பட்ட அறிவுத்திறன் படி மேலும் சட்டமன்றத்தில் இது அறிவிக்கப்பட்ட 20.04.2023 அரசாணை எண் 140 படி மொத்தமாக உள்ள 5,329 கடையிலிருந்து முதல் கட்டுமாக 500 கடைகள் மூடப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் இந்த அறிக்கையை இன்று .
டாஸ்மாக் நிர்வாகம் இந்த செய்தி சுற்றறிக்கையின் மூலமாக மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளுக்கு இந்த 500 கடைகளில் இனம் கண்டறிவதற்கான சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.